
இந்தியாவில் கோரோன வைரஸ்
இந்தியாவில் கோரோன வைரஸ்
இந்தியாவை சேர்ந்த இருவர் மார்ச் 2 அன்று பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புது தில்லி மற்றும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நோயாளிகளின் மருத்துவ நிலையை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.
கோரோன வைரஸ் ஆள் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி சமீபத்தில் இத்தாலிக்கு சென்று வந்த பயண வரலாறு உள்ளது அவர் டெல்லியில் இருந்து சென்றுவந்துள்ளார், அவர் தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மற்றொரு நபருக்கும் சமீபத்தில் துபாய்க்கு சென்று வந்த பயண வரலாறு உள்ளது என்று அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தவிர,
தெலுங்கானாவில் அனுமதிக்கப்பட்ட நபர் ஆரம்பத்தில் ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று பின்னர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.